Mohandas : முரளி கார்த்திக் இயக்கியுள்ள மோகன்தாஸ் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

வெண்ணிலா கபடி குழு மூலம் அறிமுகம்

சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடமும் பிடித்தது. இதையடுத்து குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகண்டார் விஷ்ணு விஷால்.

திருப்புமுனை தந்த ராட்சசன்

இவரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது ராட்சசன் தான். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படத்தை ராம்குமார் இயக்கி இருந்தார். அந்த ஆண்டின் சிறந்த படமாக அது அமைந்தது. மேலும் அப்படத்தை தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்து வருகின்றனர்.

வெற்றிகண்ட எஃப்.ஐ.ஆர்

இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான காடன், சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அண்மையில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த எஃப்.ஐ.ஆர் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வெளியாகி வெற்றியை ருசித்தது.

மோகன்தாஸ் அப்டேட்

அவர் நடிப்பில் தற்போது தயாராகி உள்ள படம் மோகன் தாஸ். முரளி கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது, அதன்படி இப்படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... BB Ultimate : சிம்பு பற்றி பேசி வம்பில் சிக்கிய அனிதா.... அதுக்குனு இப்படியா சொல்லுவீங்க? - வைரலாகும் வீடியோ