பிறந்தநாள் அதுவுமா இப்படியா... கொலைவெறியுடன் திரியும் விஷ்ணு விஷால் - பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்
Mohandas Glimpse video : நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாளான இன்று அவர் நடிப்பில் உருவாகி உள்ள மோகன் தாஸ் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஷ்ணு விஷால். அந்த வகையில் இவர் நடித்த வெண்ணிலா கபடி குழு, ஜீவா, நீர்பறவை, ராட்சசன், எஃப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் அமோக வரவேற்பை பெற்றன. இன்று நடிகர் விஷ்ணு விஷால் 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா, பிறந்தநாள் கொண்டாடும் தனது கணவனுக்கு முத்த மழை பொழிந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அதன் புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... சூரியின் விடுதலையில் விஜய் சேதுபதியின் மகன்...என்ன ரோலில் தெரியுமா?
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தற்போது தயாராகி உள்ள மோகன் தாஸ் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அவர் ‘Happy Birthday to me’ என பாடல் பாடியபடி வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, அதில் அவர் கையில் சுத்தியலை வைத்துக்கொண்டு கொலைவெறியுடன் தாக்கும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன.
இதைப்பார்த்த ரசிகர்கள் பிறந்தநாள் அதுவுமா இப்படியா வீடியோ போடுவீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி இதைப் பார்க்கும் போது ராட்சசன் பட சாயலில் இருப்பதாகவும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இப்படத்தை முரளி கார்த்திக் இயக்கி உள்ளார். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... டைட்டான பனியன் அணிந்து... லைட்டான கவர்ச்சி உடன் நச்சுனு நாலு போஸ் கொடுத்த ஷிவானி - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்