நடிகர் விஷ்ணு விஷால், கோட்டூர் புறத்தில் வசித்து வரும் அப்பார்ட்மென்டில், குடித்து விட்டு ரகளை செய்து வருவதாகவும், இதை கேட்டால் தரைகுறைவாக பேசுவதாக கூறி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் இதற்க்கு ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

விஷ்ணு விஷால் வசித்துவரும் அப்பார்ட்மென்டில், வசித்து வரும் தொழிலதிபர்.... "விஷ்ணு விஷால் வீட்டில் இரவு நேரத்தில்  அதிகப்படியான இசை சத்தம் வந்ததாகவும். நேரம் செல்ல செல்ல சத்தம் அதிகரித்து கொண்டே சென்றதால் இதுகுறித்து கேட்க அவரது வீட்டின் கதவை தட்டிய போது அவரது வீட்டு கதவுகள் திறக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

பின்னர் எண் 100 - க்கு புகார் கொடுக்கப்பட்டு போலீசார் வந்தபின்னரும், தரைகுறைவான வார்த்தைகளால் விஷ்ணு விஷால் பேசியதாகவும். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து இதுபோன்ற ரகளைகள் செய்வதால், வயதானோர், மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அடிக்கடி பார்ட்டி, மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் வந்து செல்வதாகவும் தன்னுடைய புகார் மனுவில் தெரிவித்திருந்தார். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தினமும் குடித்தால் 6 பேக் வராது. கடினமான டயட் இருக்க வேண்டும். ஆல்கஹால் போன்றவற்றை கண்டிப்பாக எடுக்க கூடாது. இதில் இருந்தே லாஜிக் புரிகிறதா என்று கூறியுள்ளார்.

தன்னை இந்த இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என்றே அந்த தொழிலதிபர் இது போன்ற புகாரை கொடுத்துள்ளதாகவும், தான் ஒரு சினிமாக்காரன் என்பதால் தன்னை சந்திக்க பலர் வருவது சகஜமான ஒன்று என்றும் விளக்கம் கொடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.