கொரோனா பிரச்சனை திரைத்துறையை விட விஷ்ணு விஷாலை தான் வேகமாக சுழட்டி அடித்துள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த “காடன்” திரைப்படமும், எழில் இயக்கத்தில் நடித்த “ஜகஜால கில்லாடி“ படமும் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் அனைத்தும்  மூடப்பட்டதால், இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

அடுத்து மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் “எஃப்ஐஆர்” படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கும் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கத்தில் “மோகன்தாஸ்” என்ற படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். 

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹன்சிகா... ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... வைரலாகும் போட்டோ...!

கொரோனா அச்சம் உலகையே உலுங்கி வரும் இந்த சமயத்தில் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவிக்கலாமா என்று ரசிகர்களிடம் விஷ்ணு விஷால் கருத்து கேட்டிருந்தார். பெரும்பாலான ரசிகர்கள் ஓ.கே. சொன்னதை அடுத்து “மோகன்தாஸ்” படத்தின் டைட்டில் டீசரை விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

டீசரின் ஆரம்பத்திலேயே விஷ்ணு விஷால் சுத்தியால் யாரையோ ஆக்ரோஷமாக தாக்குகிறார். அப்படியே ரத்தம் சொட்ட, சொட்ட சுத்தியை எடுத்துக்கொண்டு  விஷ்ணு விஷால் நடந்து செல்வது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. கதிகலங்க வைக்கும் இந்த டீசரை பார்க்கும் போதே முழுக்க, முழுக்க த்ரில்லர் கதை என்பது தெளிவாகிறது. 

“ராட்சசன்” படத்தில் வில்லன் கையில் இருந்த சுத்தியை “மோகன்தாஸ்” படத்தில் விஷ்ணு விஷால் கைக்கு மாறியுள்ளது. யார் மண்டை எல்லாம் உடையப் போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.....