நகைச்சுவை நடிகர் சூரி சமீபத்தில் சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில் தனக்கு நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.70 கோடி மோசடி நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.இந்த நிலையில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘வீர தீர சூரன்’ படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், மற்றும் பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவலா மீது அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்யப்பட்டது.

'வீர தீர சூரன்' படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். சம்பள பாக்கியை தர மறுத்த நிலையில் நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.இதுகுறித்து நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு விசாரணை செய்து வந்தனர்.

மேலும் இது தொடர்பான சூரி தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு, வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அன்புவேல் ராஜன், மற்றும் ரமேஷ் குடவலா தாக்கல் செய்த முன் ஜாமீன் வழக்குகளில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவித்தது,  இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.