பிக் பாஸ் வீட்டிற்குள் எதிர்பாராத பல மாற்றங்கள் அரங்கேறி வருகிறது, மேலும் நாளுக்கு நாள் நிகழ்ச்சியின் ஸ்வாரஸ்யத்தை கூட்ட போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கதாநாயகன் படத்தில் நடித்துள்ள  நடிகர் விஷ்ணு விஷால், மற்றும் நடிகை கேத்தரின் திரேசா ஆகியோர் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இவர்களை பார்த்து அனைத்து போட்டியாளர்களும் உற்சாகத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்து  விட்டனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்குள் இவர்கள் இருவரும் தற்போது சென்றுள்ளது 'கதாநாயகன்" படத்தின் ப்ரோமோசனுக்காக என கூறப்படுகிறது.