தமிழ் திரையுலகத்தில் 38 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த, நடிகர் ஆர்யாவிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மிக பிரமாண்டமாக, ஐதராபாத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திருமணம் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.

இவரை தொடர்ந்து அடுத்ததாக லிஸ்டில் இருந்த, நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷாலுக்கும் விரைவில் கெட்டி மேளம் கொட்ட உள்ளது.

மேலும் இவர், திருமணம் செய்து கொள்ள உள்ள பெண் அனிஷாவிற்கும், விஷாலுக்கும் மார்ச் 16  ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்படுகளும் வேகமாக நடந்து வருகிறது.

ஆனால் விஷால் தற்போது நடித்து வரும் 'அயோக்கியா' படத்தில் கடைசியாக மிச்சம் இருந்த ஒரு குத்து பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் படப்பிடிப்பின் போது விஷாலுக்கு காலில் அடிபட்டதால் தற்போது அவருடைய கால் வீங்கி உள்ளது. இதனால் நடப்பதற்கு கூட விஷால் சிரமப்பட்டு வருகிறாராம்.

இன்னும் நான்கு நாட்களில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ள நிலையில் விஷால் காலில் அடிபட்டு அவர் அவஸ்தை படுவதை பார்த்து படக்குழுவினர் ரொம்ப பீல் பண்ணி வருகிறார்களாம்.