தமிழ் சினிமா நடிகர்கள் தொடர்ந்து அரசியல் கட்சி துவங்குவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் எம்.ஜி.ஆரில் துவங்கி, சிவாஜி, விஜயகாந்த், சரத்குமார், டி.ராஜேந்தர், கமல், ரஜினி என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். இதில் முக்கிய பிரபலங்கள் சிலர் தமிழ் நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது இளம் நடிகர்கள் சிலரும் அரசியல் கட்சி துவங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகயில், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று அனுபவம் உள்ளதால், நடிகர் விஷால் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதல் அரசியலில் காலடி எடுத்து வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தன்னுடைய ரசிகர் மன்றங்களை ஒரு அரசியல் அமைப்பாக விஷால் அறிவிக்கவுள்ளதாகவும், இந்த அமைப்பிற்கு புதிய கொடியை விஷால் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இன்று நடிப்பில் வெளியான இரும்புதிரை படத்தின் '100 வது' நாள் வெற்றி விழாவையும் விஷால் ரசிகர் மன்றத்தினர் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்ந்து தமிழக அரசியலிலும் காலடி எடுத்து வைக்கும், விஷாலுக்கு மக்களின் ஆதரவு கிடைக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.