vishal speech against sunmusic vj

சூர்யாவின் உயரத்தை வைத்து கிண்டல் செய்த சன் மீயூசிக் விஜேக்களுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.

சூர்யா நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சன் மியூசிக் சேனலில் ஒளிபரப்பாகும் கிசு கிசு நிகழ்ச்சியில் இந்த செய்தியை பற்றி இரு தொகுப்பாளினிகள் பேசினர்.

அப்போது ஒரு தொகுப்பாளினி சூர்யாவுடன் அமிதாப் நடித்தால், ஸ்டூல் போட்டு தான் நடிக்க வேண்டும் என கலாய்த்தார். இதற்கு மற்றொரு தொகுப்பாளினியோ, உட்கார்ந்து நடித்தால் உயர பிரச்சனையே இல்லை என்று கிண்டலடித்தார். இது சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோர் மத்தியிலும் மிகுந்த கோபத்தை உண்டாக்கியுள்ளது. இதற்கு திரையுலகை சேர்ந்தவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் தமது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது காமெடியா? நிச்சயமாக இல்லை. காமெடி என்ற பெயரில் கீழ்த்தரமாக செயல்படுவதுதான் இது. முற்றிலும் முட்டாள்தனமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

சூர்யா போன்ற முன்னணி நடிகரை சிறிதும் மதிக்காமல் விஜேக்கள் கீழ்த்தரமாக பேசியதை, சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.