தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொது செயலாளருமான விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி க்ரிதிஷ்  ஆகியோரின் திருமணம் இன்று சென்னையில் உள்ள பிரபல திருமணமண்டபத்தில் நடைபெற்றது  

இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த ஞானவேல் ராஜா , நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் – சரண்யா பொன்வண்ணன் மற்றும் குடும்பத்தினர் , பொருளாளர் கார்த்தி – ரஞ்சினி கார்த்தி , தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் , கிர்த்திகா உதயநிதி , தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி , தயாரிப்பாளர் சத்ய ஜோதி G.தியாகராஜன் , சுஹாசினி மணிரத்தினம் , சுந்தர்.C – குஷ்பூ சுந்தர், மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.