விஷாலோட வருங்கால மனைவி ஃபோட்டோவ பாக்க துடியா துடிச்சீங்களே பாஸ்...இதோ...

First Published 11, Jan 2019, 12:10 PM IST
vishal's wife photo
Highlights

பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம். நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம், திருமண தேதிகளை குடும்பத்தினர் தீர்மானித்து கொள்வார்கள். மேலும், முன்னதாகவே கூறிய மாதிரி நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில்தான் திருமணம் நடைபெறும்’ என கூறியிருந்தார்.

விஷால் திருமணம் செய்துகொள்ளப்போகும் செய்தியை அவரதுதந்தை ஜி.கே.ரெட்டி உறுதி செய்திருந்த நிலையில் அவரது  மணப்பெண்ணின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு விஷால் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும், மணப்பெண் ஹைதராப்பாத்தைச் சேர்ந்தவர் என்பதை மட்டும் ஜீ.கே.ரெட்டி தெரிவித்திருந்தார். அடுத்து அச்செய்தியை உறுதி செய்த விஷால்,’அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மைதான். ஆனால் இது காதல் திருமணம் அல்ல. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம். நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம், திருமண தேதிகளை குடும்பத்தினர் தீர்மானித்து கொள்வார்கள். மேலும், முன்னதாகவே கூறிய மாதிரி நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில்தான் திருமணம் நடைபெறும்’ என கூறியிருந்தார்.

ஆனால் விஷாலோ அவரது தந்தையோ என்ன காரணத்தாலோ மணப்பெண்ணின் புகைப்படத்தை மட்டும் வெளியிடவில்லை. இதோ இங்கே விஷால் படத்துக்கு பக்கத்தில்  காட்சி அளிக்கிறாரே அவர்தான் அனிஷா. திருமணத்திற்குப் பிறகு விஷால் விரும்பினால் ஹாலிவுட் படங்களையே தயாரிக்கமுடியும் என்கிற அளவுக்கு பெத்த கோடீஸ்வரியாம் அனிஷா.

loader