Asianet News TamilAsianet News Tamil

’நீதிபதிகளை தெய்வமாக மதிக்கிறோம்' என்கிறார் விஷால்... இந்த செண்டிமெண்ட் யாருக்காக தெரியுமா?...

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் இளையாராவுக்கு விழா எடுக்கும் நிகழ்ச்சிக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், கமிஷனர் அலுவலகத்தில் புகார், கோர்ட்டில் தடைகேட்டு வழக்கு, பாராட்டு விழாவுக்கு எதற்கு 3.5 கோடி சம்பளம் என்று பரபர செய்திகள் பற்றிக்கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன்னர் நிருபர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார் விஷால்.

vishal's reply the media
Author
Chennai, First Published Jan 24, 2019, 4:22 PM IST

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் இளையாராவுக்கு விழா எடுக்கும் நிகழ்ச்சிக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், கமிஷனர் அலுவலகத்தில் புகார், கோர்ட்டில் தடைகேட்டு வழக்கு, பாராட்டு விழாவுக்கு எதற்கு 3.5 கோடி சம்பளம் என்று பரபர செய்திகள் பற்றிக்கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன்னர் நிருபர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார் விஷால்.vishal's reply the media

அப்போது நிருபர்கள் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு தடைகோரி கோர்ட்டுக்குப் போயிருக்கிறாரே என்று கேட்டதற்கு ’நீதிபதிகளை தெய்வமாக மதிக்கிறோம். இந்த வழக்குகள் எல்லாம் நல்லபடியாக முடியும். 1,000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா என்ற இசை மேதையைக் கொண்டாடும் நிகழ்ச்சி இது. அதற்கு தடை வழங்க யாருக்காவது மனம் வருமா?

ஜே.சதிஷ்குமார் எங்கள் சங்க உறுப்பினர். எனது நண்பர் தான். எந்த வி‌ஷயமாக இருந்தாலும் அவர் நேராக கேட்டு இருந்தால் சொல்லி இருப்போம். அந்த வழக்கு போட்ட செலவில் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி பார்த்து இருக்கலாம்.

இளையராஜாவை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு யாராலும் பூட்டு போட முடியாது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை முறையாக சந்தித்து நிச்சயமாக வெற்றி பெறுவோம். நிகழ்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். எந்த தடையும் ஏற்படாது’ என்றார். vishal's reply the media

சங்கத்தில் எட்டுக்கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, ‘ நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை. எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்துள்ளோம். எனக்கு மறைமுக எதிரி என்று யாரும் இல்லை. தயாரிப்பாளர் சங்க வைப்பு நிதி மற்றும் கணக்கு வழக்குகள் குறித்த அனைத்தையும் பொதுக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிப்போம். மார்ச் 3-ந்தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்’ என்று கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios