Asianet News TamilAsianet News Tamil

’சண்டக்கோழி2’ தியேட்டர்கள் தொடர்பாக விஷால் எடுத்த விபரீத முடிவு!!

தனக்கு தரப்பட்ட தொடர்நெருக்கடிக்களினாலோ அல்லது மனப்பூர்வமாகவோ ஒரு அதிரடி முடிவு எடுத்து அசத்தியிருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத்தலைவரும் ‘சண்டக்கோழி ஹீரோவுமான விஷால். வரும் 18 அன்று வெளியாகும் தனது ‘சண்டக்கோழி2’ படத்தை வெளியிட 8 தியேட்டர்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறார்.

Vishal Risk for Sandakozhi 2 film
Author
Chennai, First Published Oct 14, 2018, 6:10 PM IST

தனக்கு தரப்பட்ட தொடர்நெருக்கடிக்களினாலோ அல்லது மனப்பூர்வமாகவோ ஒரு அதிரடி முடிவு எடுத்து அசத்தியிருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத்தலைவரும் ‘சண்டக்கோழி ஹீரோவுமான விஷால். வரும் 18 அன்று வெளியாகும் தனது ‘சண்டக்கோழி2’ படத்தை வெளியிட 8 தியேட்டர்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறார். இவை அனைத்தும் திருட்டு பிரிண்ட் எடுக்க உறுதுணையாய் இருந்த தியேட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாக வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று நல்ல வசூலும் ஈட்டி வருவதுடன், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதேவேளையில், பைரசி எடுப்பவர்கள் அவர்களது கடமையை கண்ணும் கருத்துமாய் செய்து வருகின்றனர். இந்த தியேட்டர்காரர்களுக்கு இனி படங்கள் வெளியிட அனுமதி தரக்கூடாது’ என்று பல தயாரிப்பாளர்களிடமும் வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, 'மனுசனா நீ', 'கோலிசோடா 2', 'ராஜா ரங்குஸ்கி', 'சீமராஜா', 'இமைக்கா நொடிகள்' ஆகியப் படங்களின் பைரசி எடுக்க உதவிய திரையரங்குகளில் 'சண்டக்கோழி-2' திரையிடப்படமாட்டாது, படத்தை திரையிட உதவும் கே.டி.எம்மை வெளியிடக்கூடாது எனத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

Vishal Risk for Sandakozhi 2 film

மேலும், அந்த தியேட்டர்கள் மீது போலீஸ் விசாரணை நடந்து வரும் வேளையில்,  கியூப் நிறுவனம் தொழில்நுட்ப சேவையை அளித்து வருவதையும் நிறுத்த வேண்டும். இந்த வழக்குகள் முடிவை எட்டும் வரையில் போலீஸாரால் புரொஜக்டர் கையகப்படுத்திய திரையரங்குகளுக்குப் புதிய புரொஜக்டர் அல்லது மாற்று புரொஜக்டர்கள் தருவதோ, தயாரிப்பாளரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது போல் இருக்கும்' எனவும் விஷால் அறிவித்திருக்கிறார்.

பைரசி புகாரில் சிக்கியுள்ளத் திரையரங்குகள்:

கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர்

கிருஷ்ணகிரி நயன்தாரா

மயிலாடுதுறை கோமதி

கரூர் எல்லோரா

கரூர் கவிதாலயா

பெங்களூர் சத்யம்

விருத்தாச்சலம் தியேட்டர்

மங்களூர் சினி போலீஸ்

Vishal Risk for Sandakozhi 2 film

இதுகுறித்து பேசிய கியூப் நிறுவன முதன்மை மேலாளர் சதீஷ்,"சண்டக்கோழி 2 திரைப்படத்தை பைரசி எடுக்கப்பட்டத் தியேட்டர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று விஷால் முடிவெடுத்துள்ளது வரவேற்கத்தக்க விஷயம். பல லட்ச ரூபாய் முதலீடு செய்யதுள்ள புரஜக்டரை பறிமுதல் செய்வார்கள் எனத் தெரிந்தும், ஒரு திருட்டு வி.சி.டி சிக்கினால் அது எந்த தியேட்டரில், எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டது எனத் துல்லியமாக ஆராய்ந்து அறிக்கையளித்து தயாரிப்பாளருக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். விஷால் முடிவினை மற்ற தயாரிப்பாளர்களும் பின்பற்றவேண்டும்'’ என்றார்.

இதே முடிவை மற்ற படத்தயாரிப்பாளர்களும் பின்பற்ற ஆரம்பித்தாலே பைரஸி பிரச்சினையில் பாதி முடிந்துவிடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios