Vishal releases party name and flag in December.

தமிழகத்தில் இதுவரை சினிமா துறையைச் சேர்ந்தவர்கள்தான் ஆட்சி அதிகாரம் செலுத்தி வந்துள்ளனர்.

இன்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பின்னர் அப்படி ஒரு நிலை உருவாகும் என்ற சூழ்நிலை தான் இருக்கிறது,

ஒருபக்கம் கமல் ஹாசன்? மறுபக்கம் ரஜினிகாந்த்? இன்னொரு பக்கம் விஜய்? என்று சினிமா வட்டாரங்களில் கோட்டையை நோக்கி நிறைய பேர் பயணிக்கின்றனர்.

கமல் பிக் பாஸில் துவங்கி, மேடை, டிவிட்டர் என அனைத்து இடங்களிலும் அரசியல் தான் பேசி வருகிறார்.

தற்போது தமிழக அரசியல்வாதிகளுக்கு சவால் விடும் ஒரே ஆள் கமல் மட்டுமே. அவரது பிறந்த நாள் அன்று கட்சி துவங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். மக்களுக்கு அவர் மீது பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு இல்லை என்பதே உண்மை. ஆளும் கட்சியை எதிர்த்து வாய் திறக்காத ஒரு புள்ளபூச்சியாகவே ரஜினி இருப்பதால் அவர் அரசியலுக்கு வரமால் இருப்பதே அவருக்கு நல்லது.

இந்த நிலையில், நடிகர் விஷால் அரசியலுக்கு வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. வரும் டிசம்பரில் நடிகா் விஷால் மாபெரும் அரசியல் மாநாடு ஒன்றை நடத்தி அந்த மாநாட்டில் தன்னுடைய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளாராம்.

அவருக்கு எந்தமாதிரியான வரவேற்பு உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவரும் மக்களை எரிச்சலூட்டாமல் இருந்தால் சரி.