ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக இளைஞர்கள்கள் நடத்திய அறவழி போராட்டம் , உலகையே தமிழ் மக்கள் மீது திரும்பி பார்க்க வைத்துவிட்டது.
இந்நிலையில், தொடர்ந்து ராப்பகலாக போராடிய இளைஞர்களின் அறவழி போராட்டத்தில் திரைத்துறை நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் , ஜல்லிக்கட்டுகாக அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து, ஜல்லிகட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என, போராட்டகாரர்களும் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று , போராட்டம் முடிவுக்கு வரும் நிலையில், கலவரம் பூண்டது . போலீசாருக்கும் மாணவருக்கும் இடையே கலவரம் நடந்தது. இதில் போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
விஷால் மீது குற்றசாட்டு :
போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது, சரிதான் என நடிகர் விஷால் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார் என்ற செய்தி , சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மறுப்பு தெரிவிக்கும் விஷால் :
தன் மீது தேவையில்லாத பழி சுமத்துவதாகவும், தான் அவ்வாறு தெரிவிக்கவில்லை, நான் எப்பொழுதும் மாணவர்களுக்கு ஆதரவு தான். எனவே தற்போது என் மீது சுமத்தப்படும் எந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என, தன் மீதான குற்றத்திற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் விஷால் தன்னுடைய வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார்
மேலும், தன்னை பழிவாங்க யாரேனும் நினைத்தால் , வேறு விதத்தில் பழியை தீர்த்துக்கொள்ளுங்கள் .. இளைஞர்களின் போராட்டத்தோடு ஒப்பிட்டு வதந்தியை கிளப்பாதீங்க என தெரிவித்துள்ளார் .
