சினிமாவை பொறுத்தவரை, சில சமயங்களில் குறிப்பிட்ட நடிகருக்காக உருவாக்கப்படும் கதையில் எதேர்ச்சியாக வேறு ஒரு நடிகர் நடிக்க, அந்த படம் சூப்பர் ஹிட் ஆகிவிடுவது உண்டு. இவ்வளவு ஏன், வடிவேலுவுக்காக உருவாக்கப்பட்ட, 'துள்ளாத மனமும் துள்ளும்'படத்தில் விஜய் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது.

இதே போல் நடிகர் விஷாலுக்காக உருவான கதையை அவர் ரிஜெக்ட் செய்ததால் சூர்யா நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு, சூர்யா நடிப்பில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்ற திரைப்படம் 'அயன்'. இந்த படத்தின் கதையை முதலில் இயக்குநர் கே.வி.ஆனந்த் விஷாலை மனதில் வைத்து தான் உருவாக்கினாராம். விஷாலை சந்தித்து, இந்த கதையை கூறிய போது 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால், பிறகு பார்த்து கொள்ளலாம் என தவிர்த்துள்ளார்.

திடீர் என சூர்யாவை சந்திக்க நேரிட்ட கே.வி.ஆனந்த். எழுதி வைத்திருந்த 'அயன்' படத்தின் கதையை கூறியுள்ளார். சூர்யாவுக்கும் கதை மிகவும் பிடித்து போனதால், கதையில் சிறு சிறு மாற்றம் செய்து இந்த படத்தை இயக்கினார் கே.வி.ஆனந்த். சூர்யா எதிர்பார்த்ததை விட இந்த படம் வசூலிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகவெற்றிய வெற்றியை பெற்றது. 

ஒருவேளை இந்த படத்தில் விஷால் நடித்திருந்தால், இந்த வெற்றி படத்தில் நடித்த பெருமை அவரையே சேர்ந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.