காசி விஸ்வநாதர் கோவில் 800 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட நிலையில், காசிக்கு சென்ற விஷால் மிகவும் பிரமிப்புடன் பிரதமரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.  


உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் விஸ்வநாதர் கோயில் வரை, சுமார் 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் கூடுதல் சிறப்பாக, இக்கோயிலில் மிக பிரமாண்ட அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்குவதற்கான மையம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாகவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், காசிக்கு சென்ற விஷால் பிரதமரை புகழ்ந்து தள்ளியுள்ளார். 

மேலும் செய்திகள்: Bharath Kalyan Wife death: பிரபல சின்னத்திரை நடிகர் பாரத் கல்யாண் மனைவி அதிர்ச்சி மரணம்..!

மேலும் செய்திகள்: பிக்பாஸ் வீட்டில் யார் ஸ்ட்ராங்? யார் வெளியேறுவார்? போட்டியாளர்களுக்குள் நடக்கும் பேச்சு! வெளியான புரோமோ!

இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், "அன்புள்ள மோடிஜி, நான் காசிக்குச் சென்று, அற்புதமான தரிசனம் செய்தேன். கங்கா நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், , எவரும் தரிசிக்கக் கூடிய வகையிலும் மாற்றியுளீர்கள். கோயிலில் நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார், ஹாட்ஸ் ஆஃப், சல்யூட் யூ என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…