விஷால், நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், என பல்வேறு பதவிகளை வகித்து வந்தாலும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நாம் ஒருவர்" என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் உதவ யாரும் இல்லாமல்,  கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கும் மக்களை தேடி பிடித்து , நிகழ்ச்சியாளர்கள் அவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கியில்... பொதுமக்கள் மத்தியில் ஏதேனும் ஒரு வேலை செய்து, அதில் வரும் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில், நடிகை வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை செய்து தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர். 

இந்நிலையில்,  இந்தவாரம் திருச்சியை சேர்ந்த ஒரு பெண் அவருடைய குழந்தையோடு கலந்துகொண்டார்.  இதில் என்ன கொடுமை என்றால் அந்த பெண்ணுக்கு 'மார்பக புற்றுநோய்'.  இதை மருத்துவர்கள் கடைசி நேரத்தில் தான் கண்டுபிடித்துள்ளனர். 

இவருக்கு உதவும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு, தற்போது  இவர் நடித்து வரும் சீரியலில் வரும் லட்சுமி ஸ்டோர்ஸ், கடையில் புடவைகள் விற்று... அதில் வந்த 45 ,௦௦௦ தொகையை... அந்த பெண்ணின் மருத்துவ செலவிற்காக கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, மார்பக புற்று நோயின் தீவிரம் என்ன என்பதும், அதன் வலி என்ன என்பதும் தனக்கு நன்றாக தெரியும்... என நடிகர் விஷால் அழுகையை கட்டு படுத்த முடியாமல் அழுதார். இதை பார்த்த நடிகை குஷ்பு விஷாலுக்கு ஆறுதல் கூறியதோடு, பாதிக்க பட்ட பெண்ணை கட்டி பிடித்து அழுதார்.

ஒரு நிலையில் விஷால்,  அழுகை தாங்க முடியாமல் நிகழ்ச்சியை விட்டு வெளியேற முயன்றார். பின் அவரை நடிகை குஷ்பு கட்டியணைத்து ஆறுதல் கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியின் அரங்கமா கண்ணீரில் மூழ்கியது.