vishal movie create record in malayalam movie

மோகன் மற்றும் விஷால் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்த வில்லன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்தப் படத்தில் மோகன் லால் ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாகவும் , விஷால் டாக்டராகவும் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருந்த வில்லன் திரைப்படம் தான் விஷாலுக்கு முதல் மலையாள திரைப்படமாகும். 

வில்லன் திரைப்படம் தான் தற்போது மலையாளத்தில் மோகன் லால் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படம். இத்திரைப்படம் இதற்கு முந்தைய மோகன்லால் படங்களின் சாதனையை முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. த்ரிஷ்யம் படத்துக்கு பின்னர் மோகன் லாலின் நடிப்பை அனைவரும் ரசித்து பாராட்டியதும் இந்தப்படத்தில் தான் என்று கூறப்படுகிறது.

வில்லன் திரைப்படத்தில் மஞ்சு வாரியார் , ஹன்சிகா , ஸ்ரீகாந்த் ( தெலுங்கு நடிகர் ) , ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை சல்மான் கான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ பஜிரங்கி பாய்ஜான் “ திரைப்படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.