Asianet News TamilAsianet News Tamil

விஷால் ஒரு ஏமாற்றுக்காரன்...மறைமுகமாக தாக்கிய ஸ்ரீகாந்த்...

vishal is lier srikanth open talk
vishal is-lier-srikanth-open-talk
Author
First Published Mar 6, 2017, 2:24 PM IST


நடிகர் விஷால் மற்றும்  ஸ்ரீகாந்த் ஆகிய  இருவரும் நல்ல நண்பர்கள். விஷால் நடிகர் சங்க தேர்தலில் நின்ற போது தன் முழு ஆதரவையும்  கொடுத்து நடிகர் சங்கத்திற்காக பாடுபட்டவர்  ஸ்ரீகாந்த்.

இந்நிலையில்  சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  ஸ்ரீகாந்த் மிகவும் கோபமாக விஷாலை வார்த்தைகளால் தாக்கினார்.

இதில் இவர் பேசுகையில் ‘ஒருவர் நடிகர் சங்கத்தில் உள்ள  பிரச்சனைகளை தீர்த்துவைப்பதாக கூறி நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷால்.

தற்போது , அந்த வேலையை விட்டு, விட்டு  வேறு ஒரு சங்க தேர்தலில்(தயாரிப்பாளர் சங்கம்) போட்டிப்போட போகிறேன் என கூறுவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தன்னை  போலவே பல நடிகர்கள் உங்களை நம்பி வாக்களித்துள்ளனர், அவர்களை ஏமாற்றாதீர்கள்  மனநிலையை புரிந்துக்கொள்ளுங்கள்’ என ஸ்ரீகாந்த் மறைமுகமாக விஷாலை தாக்கினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios