vishal help for school students
எப்போதும் மாணவ , மாணவியரின் கல்விக்கு முதல் ஆளாக உதவுபவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால்.
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மிக சிறந்த பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் சீட் வாங்கி தந்து அவர்களுடைய படிப்பிற்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டு தன்னுடைய தேவி அறக்கட்டளையின் மூலம் அவர்களின் கல்விக்கு உதவுபவர் விஷால்.
தற்போது கல்வியில் பின்தங்கிய சமூதாயமான இருளர் சமூதாயத்தில் இருந்து 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மிகச்சிறந்த கல்லூரியான லயோலா கல்லூரியில் இடம் வாங்கி தந்து அவர்களின் கல்விக்கு உதவியுள்ளார் விஷால்.
