vishal help for people

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழையால், சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பலர், தங்கள் வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்துள்ளதால் அத்தியாவசிய வேலைகளைக் கூடச் செய்யமுடியாத நிலை உருவாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் நடிகர் விஷால் சென்னையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என அதிரடியாகக் களத்தில் இறங்கியுள்ளார். 

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வடபழனியில் அமைத்துள்ள தன்னுடைய அலுவலகத்தில், உணவு மற்றும் குடிநீர் போன்றவை எந்த நேரத்திலும் கிடைக்கும் என சமூக வலைத்தளத்தில் நேற்று அறிவித்திருந்தார். அதன் படி இன்று அவருடைய அலுவலகத்தில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டாலும் அதனை வாங்க பலர் அவருடைய அலுவலத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஷாலின் ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று மக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

Scroll to load tweet…