Vishal give the award for Mittali raj

சென்னையில் நேற்று இரவு பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்ட JFW விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திரையுலகத்தை சேர்த்த பலர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருடம் 'ஐஸ் கிரேஸிங்" என்கிற விருது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் 'மிட்டாலி ராஜ்'க்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விருதை, நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் வழங்கினார். இந்த விருதை வழங்கிய பின் மேடையில் பேசிய விஷால்.

பொதுவாக விருது வழங்கு விழாக்களுக்கு அழைத்தாலும் பல்வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதால் தவிர்த்து விடுவேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது 'மிட்டாலி ராஜ்' காக தான் அவரை பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் அது இன்று நிறைவேறி விட்டது. 

பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் 'மிட்டாலி ராஜ்' இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டும் என கூறி மிட்டாலி ராஜ்யுடன் மிடுக்காக போஸ் கொடுத்தார் விஷால்.