vishal gave nilavembu kasaayam in shooting palce itself

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் டெங்கு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும், டெங்கு ஒரு சவாலாக தான் உள்ளது

இந்நிலையில் “சண்டைகோழி 2” படப்பிடிப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது நடிகர் விஷால் மற்றும் மயில்சாமி ஆகியோர் ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர்.

நிலவேம்பு கசாயத்தை வழங்கிய விஷாலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். ஆனால் நிலவேம்பு கசாயம் தமிழக அரசு மருத்துவமனையில் எப்பொழுதுமே வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது