vishal follow the hollywood style
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ இரும்புத்திரை" இதில் நடிகர் விஷால், நடிகை சமந்தா, அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாதி மட்டுமே பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதில் படத்தின் இயக்குநர் மித்ரன், லைகா குழுமத்தை சேர்ந்த கருணா , அயுப் கான் , எடிட்டர் ரூபன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
ஹாலிவுட்டில் திரையிடுவது போல இந்தியாவிலேயே முதன் முறையாக விஷாலின் “ இரும்புத்திரை" திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது இது குறித்து இந்த படத்தின் இயக்குநர் மித்ரன் கூறுகையில்...
எப்போதும் புதுமையை விரும்பும் விஷால்... அவர் தன்னுடைய ஏதாவது ஒரு படத்தின் முதல் பாதியை செய்தியாளர்களுக்கு திரையிட்டு கருத்து கேட்க வேண்டும் என்று நினைத்து வந்தார். அது இரும்புத்திரை படத்துக்கு நடந்துள்ளது காரணம் இரும்புத்திரை படத்துக்கு அது சரியாக இருக்கும் என்பதால் தான். இரும்புத்திரை திரைப்படத்தின் இண்டர்வல் ப்ளாக் சரியான ஒன்றாக இருக்கும். இரும்புத்திரை ஆதாரினால் ஏற்ப்படும் ஆபத்தை பற்றி பேசும் படம் அல்ல டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
