தமிழ் சினிமாக்களில் இப்போதெல்லாம் கதைகள் இருக்கின்றனவோ இல்லையோ குறியீடுகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. இந்நிலையில் என்ன குறியீட்டை மனதில் வைத்து சூட்டினாரோ தெரியவில்லை, தான் இயக்கவிருக்கும் முதல் படத்துக்கு ‘தெருநாய்’ என்று பெயர் வைத்திருக்கிறார் விஷால். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

படங்களில் நடித்துக்கொண்டே அவ்வப்போது உதவி இயக்குநராகவும் மூக்கை நுழைத்து தனது இயக்குநர்களுக்கு இம்சையைக்கொடுத்துவந்தவர் விஷால். பல வருடங்களாக தனது அடுத்த கனவு படம் இயக்குவதுதான் என்று சொல்லிவந்தவர் முதன்முறையாக நிஜமாகவே இயக்குநராக களம் இறங்கியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய விஷால்... ‘’நான் என்னுடைய இயக்குனர் நண்பர்களுக்கு இந்த கதையை சொன்னேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. இப்படத்தின் முதற்கட்ட வேலையை ஜனவரியில் துவங்க உள்ளேன். நாய் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர் என்பதாலோ என்னவோ, இப்படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் நான் இன்னும் யாரையும் முடிவு செய்யவில்லை. 

இப்படத்தின் ஹீரோ ஒரு தெருநாய் தான். ஆனால் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளது. இப்படத்தில் நிறைய விலங்குகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். அதானால் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருக்கும். வரும் ஜனவரியில் படப்பிடிப்பை துவங்க உள்ளேன்’’ என்று கூறும் விஷால், படத்தில் குறியீடு எதுவும் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.