நடிகர் விஷால் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் பூரண குணம் அடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால், நடிகர் என்பதை தாண்டி, தயாரிப்பாளர், துணை இயக்குனர் என, திரையுலகத்தில் பல்வேறு விதமாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியவர். மேலும், தயாரிப்பாளர் சங்க தலைவர், மற்றும் முன்னாள் நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றிய பெண், சுமார் 45 லட்சம் மோசடி செய்ததாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார், இந்த நிறுவனத்தின் மேலாளர். பின்னர் இவருடைய கார் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் மேலும் சில பிரச்சனைகளை உருவாகியது.

இதற்க்கு இடையே தான், உலகியே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் நடிகர் விஷாலும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 20  நாட்களாக தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த இவர், தற்போது முழுமையாக குணமடைந்து விட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விஷாலின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.