Asianet News TamilAsianet News Tamil

“ஓடிடி ரிலீசுக்கு தடையில்லை”... தீபாவளிக்கு பட்டையைக் கிளப்ப போகும் விஷால் படம்...!

இன்றைய வழக்கு விசாரணையின் போது, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த ஆக்‌ஷன் திரைப்படம் போதுமான அளவு லாபம் ஈட்டியிருப்பதாகவும், சக்ரா திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ரவீந்திரனுடன் எவ்வித ஒப்பந்தமும் போடவில்லை என்றும் விஷால் தரப்பில் கூறப்பட்டது. 

Vishal Chakra Movie OTT Release Case Chennai High court order
Author
Chennai, First Published Sep 30, 2020, 8:01 PM IST

இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் சக்ரா படத்தில் விஷால் நடித்து வருகிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் “சக்ரா” படம் தீபாவளிக்கும் ஓடிடி-யில் வெளியாகும்  என விஷால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சக்ரா படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Vishal Chakra Movie OTT Release Case Chennai High court order

 நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததாக கூறப்பட்டது.  மேலும் தங்கள் நிறுவனத்திற்கு ஆனந்தன் கூறிய அதே கதையை தற்போது நடிகர் விஷால் தனது நிறுவனத்திற்கு சக்ரா என்ற பெயரில் எடுத்துள்ளதாகவும், அதனால் அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். 

Vishal Chakra Movie OTT Release Case Chennai High court order

 

இதையும் படிங்க:  லட்சுமி மேனனுக்கு பதிலாக இந்த நடிகையா?... பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்க போகும் விஜய் சேதுபதி பட நாயகி...!

செப்டம்பர் 24ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, செப் .30-க்குள் இரு தரப்பினரும் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் சக்ரா திரைப்படத்தை ஓடிடி-நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. 

Vishal Chakra Movie OTT Release Case Chennai High court order

 

இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” “பாரதி கண்ணம்மா” சீரியல்களில் அதிரடி மாற்றம்... பிக்பாஸுக்காக விஜய் டிவி செய்த காரியம்!

இன்றைய வழக்கு விசாரணையின் போது, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த ஆக்‌ஷன் திரைப்படம் போதுமான அளவு லாபம் ஈட்டியிருப்பதாகவும், சக்ரா திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ரவீந்திரனுடன் எவ்வித ஒப்பந்தமும் போடவில்லை என்றும் விஷால் தரப்பில் கூறப்பட்டது. அதேபோல் சக்ரா படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய விதித்த தடையை நீட்டிக்க வேண்டுமென ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சக்ரா படத்தை ஓடிடியில் வெளியிடும் நடவடிக்கை விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்துவைத்து உத்தரவிட்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios