தன்னை திரையுலகத்தில் அறிமுகப்படுத்திய இயக்குநரிடமே ‘கதை கேட்க நேரமில்லை’ என்று நடிகர் விஷால் உதாசீனப்படுத்தியிருப்பது கண்டு நெட்டிசன்கள் வலைதளங்களில் கொந்தளித்து வருகிறார்கள்.

விஷால் தனது முதல் படத்தை மறந்திருக்கலாம். ஆனால் அவரை அறிமுகப்படுத்தியவர் அதை  மறக்க முடியுமா? ’செல்லமே’படம் மூலம் விஷாலை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் காந்தி கிருஷ்ணா. இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான இவரது முதல் படம் ‘எஞ்சினியர்’அரவிந்தசாமி,மாதுரி தீக்‌ஷித் காம்பினேஷனில் துவங்கப்பட்டு டிராப் ஆனது. அடுத்து விஷால்,பரத்,ரீமா சென் காம்பினேஷனில் இவர் துவங்கிய படம் தான் ‘செல்லமே’. இப்படம் 100 நாட்கள் ஓடி விஷாலுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல ஓபனிங் கிடைத்தது.

‘செல்லமே’வுக்கு அடுத்து காந்தி கிருஷ்ணா இயக்கிய ‘ஆனந்த தாண்டவம்’படம் சரியாக ஓடாத நிலையில் அடுத்தபடம் கிடைக்காமல் இருந்த அவருக்கு மிக நீண்ட இடைவேளைக்குப் பின் விக்ரம் இயக்கத்தில் கிடைத்த ‘கரிகாலன்’படமும் நகரவே இல்லை. இந்நிலையில் அவ்வளவு சீக்கிரம், அறிமுகப்படுத்திய தன்னை விஷால் மறந்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கையில் அவரிடம் கதை சொல்வதற்காக முயற்சித்திருக்கிறார் காந்தி கிருஷ்ணா. ஆனால் அவரைச் சந்திக்க கூடம் நேரம் ஒதுக்கவில்லையாம் விஷால்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் மிகுந்த வேதனையுடன் பதிவிட்ட அவர்,...A R Gandhi Krishna
1 hr · 
விஷால் அறிமுகமான படம், “செல்லமே!!”
அதன் இயக்குனர் 
காந்திகிருஷ்ணா
நான்.
என்னிடம் கதை கேட்க நேரம் இல்லை!!!
வாழ்க வளமுடன்....என்று பதிவிட்டிருக்கிறார். அதன் பின்னூட்டத்தில் மக்கள் விஷாலின் மானத்தை வெரைட்டியாக வாங்கி வருகிறார்கள்.