பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் காரணம் அவருடைய அசத்தலான விளையாட்டு திறனை அவர் விளையாடும் அனைத்து கிரிக்கெட் தொடரிலும் வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் தான் காதலித்து வந்த நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்துக்கொண்டார். இவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்துக்கொண்டு இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் விராட் கோலியும் சச்சின் லிஸ்டில் இணைந்துள்ளார். அதாவது இவர் திருமணம் செய்துக்கொண்டுள்ள நடிகை அனுஷ்கா ஷர்மாவும் இவரை விட பெரியவர்.

எத்தனை வயது பெரியவர் தெரியுமா? பெரிதாக வித்தியாசம் இல்லை 7 மாதம் இவரை விட அனுஷ்கா ஷர்மா பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சச்சினை விட அவரது மனைவி வயதில் மூத்தவர் எனக் கூறி வந்த கிரிக்கெட் ரசிகர்கள் இனி விராட் கோலியை பற்றியும் விமர்சனம் செய்ய தொடங்குவர் என எதிர்பார்க்கலாம்.