இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பிரபல இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தற்போதைய இளைய தலைமுறையின் வரவேற்பை பெற்ற வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.‘பாரி’, ‘என்.எச்.19', ‘பில்லாயூரி’ ஆகிய வெப் சீரிஸ்களை தயாரித்துள்ளது. தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும்“பாதல் லோக்” வெப் தொடரும் அனுஷ்கா சர்மா தயாரித்தது தான். வட மாநிலங்களில் நடக்கும் பல நிழல் உலக அரசியல் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. 

இதையும் படிங்க: பெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்திரம்...!

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட இன மக்களை அவதூறு செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தனர். அதில் “பாதல் லோக்” வெப் சீரிஸில் எங்களது மக்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. அதனால் அந்த தொடரை தயாரித்த அனுஷ்கா சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த இனத்தைச் சேர்ந்த இளைஞர் அமைப்பினர் அனுஷ்கா சர்மாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

இதையும் படிங்க: சித்தப்புவின் பட்டப்பெயரை சுட்டு மகனுக்கு வைத்த எஸ்.ஏ.சி...எதிர்த்து கேட்டவரை கேவலமாக பழி தீர்த்த விஜய் அப்பா!

மேலும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. நந்த கிஷோர் குர்ஜார் என்பவர் “பாதல் லோக்” வெப் தொடரில் தனது புகைப்படத்தை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பேட்டி ஒன்றில், விராட் கோலி தேச பக்தர், அவர் நாட்டிற்காக விளையாடுகிறார். விராட் கோலி அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். வெப் சீரிஸில் பிரச்சனைகள் இருந்தால் சம்மந்தப்பட்ட நபர்களை சரி செய்ய சொல்வதும், இல்லையெல் முறையாக புகார் அளிப்பதும் சரியான வழியே. அதைவிட்டு விட்டு கணவன் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று அவர்களது சொந்த வாழ்க்கையில் தலையிடுவது போன்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.