அச்சு அசல் நடிகர் விஜய்யை போல் நடனமாடி மாஸ் காட்டிய தளபதியின் ஜப்பான் நாட்டு ரசிகை - வைரலாகும் வீடியோ

ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், நடிகர் விஜய்யைப் போல் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Viral video of Japan girl who recreate thalapathy vijay's dance

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். சிறியவர் முதல் பெரியவர் வரை நடிகர் விஜய்யை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும். நடிகர் விஜய் நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் சிறந்து விளங்கி வருகிறார். அவருக்கு வயது 50-ஐ நெருங்கி வரும் நிலையிலும், நடனத்தில் தொடர்ந்து அசத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான வாரிசு படத்தில் கூட நடிகர் விஜய்யின் நடனம் பெரியளவில் வரவேற்பை பெற்றது.

விஜய்யின் படங்கள் என்றாலே அதில் பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கும். பெரும்பாலும் அவரது படங்களில் இடம்பெறும் பாடல்கள் ரிலீசுக்கு முன்பே ஹிட் ஆகிவிட்டாலும், படத்தில் அவரின் நடனத்தால் அப்பாடல்கள் மேலும் வைரல் ஹிட்டான சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளன. அரபிக் குத்து, வாத்தி கம்மிங், ரஞ்சிதமே போன்ற பாடல்கள் தான் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

இதையும் படியுங்கள்... அது உங்க பேத்தி மாதிரி... 600 மார்க் எடுத்த மாணவியை இப்படி சொல்லலாமா! வைரமுத்துவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்

நடிகர் விஜய்யின் நடனம் இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் பிரபலமாகி உள்ளது. அழகிய தமிழ்மகன் படத்தில் இடம்பெறும் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே பாடலுக்கு நடிகர் விஜய் தரையில் மண்டியிட்டு ஆடும் மிகவும் கடினமான ஸ்டெப்பை அசால்டாக செய்து அசத்தி இருப்பார். விஜய்யின் அந்த பேமஸ் ஆன ஸ்டெப்பை தற்போது ஜப்பான் நாட்டு பெண் ஒருவர் போட்டு அசத்தி இருக்கிறார்.

அந்த பாடலில் விஜய் அணிந்திருக்கும் உடை முதல், அவர் ஆடும் நடன அசைவுகள் வரை அனைத்தையும் ஜெராக்ஸ் எடுத்தது போல் ஆடி அசத்தி இருக்கிறார் அந்த ஜப்பான் நாட்டு ரசிகை. அந்த பெண்ணின் நடனம் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் ரீச் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... காணாமல் போன முக்கிய பொருள்... ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios