ஏற்கனவே தனுஷ் அமலாபால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனா படம் வேலையில்லா பட்டதாரி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இரணையுள்ளது அனைவரும் அறிந்தது தான். இந்த படத்தை கலை புலி தாணு தயாரிக்கிறார்.

இந்நிலையில் 'வேலையில்லா பட்டதாரி 2' திரை படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது.

இந்த படத்தின் தொடக்கவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இந்த படத்தின் நாயகன் தனுஷ், நாயகி அமலாபால், விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த படத்தின் தொடக்கவிழா புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள தனுஷ், 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்டதை குறிப்பிட்டு 'இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும். நன்றி தலைவா' என்று பதிவு செய்துள்ளார்.

இன்று முதல் 'விஐபி 2' திரைப்படம் விறுவிறுப்புடன் தொடங்கவுள்ளதாகவும், 'ரகுவரனை' மீண்டும் விரைவில் திரையில் பார்க்கலாம் என்றும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.