கல்லீரல் பிரச்சனை காரணமாக, கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த பிரபல வில்லன் நடிகர் அனில் முரளி, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

200 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர், மலையாள நடிகர் அனில் முரளி 
. மேலும் தமிழிலும், தனி ஒருவன், நிமிர்ந்து நில், கொடி, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த இவர்... மனைவி சுமா,  மகன் ஆதித்யா, மற்றும் மகள் அருந்ததியுடன் வசித்து வந்த நிலையில், கல்லீரல் குறைப்பட்டால் பாதிக்கப்பட்டிருந்த அனில் முரளி கொச்சியில் உள்ள அஸ்டர் மெடிசிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதைத்தொடர்ந்து, இவருக்கு மலையாள திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். கடைசியாக தமிழில் அணில் முரளி நடிப்பில், வால்டர் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.