vilithiru is need for this community Pa.ranjith

விழிக்காத இச்சமூகத்திற்கு ‘விழித்திரு’ அவசியம் என்று இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டியுள்ளார்.

‘விழித்திரு’ படத்தைப் பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டினார் இயக்குனர் பா.ரஞசித்.

மீரா கதிரவன் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் விழித்திரு’.

இந்தப் படத்தைப் பார்த்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது டிவிட்டரில் வெகுவாக பாராட்டியுள்ளார்.

படம் குறித்து பா.ரஞ்சித் கூறியது: ‘பணம் அதிகாரம்-அன்பு=சமூகம்.. விழிக்காத இச்சமூகத்திற்கு #விழித்திரு அவசியம். அனைவரும் பார்க்கவேண்டிய படம்!!!! வாழ்த்துகள்!’ என்று பதிவிட்டுள்ளார்.

பெரும் போராட்டங்களுக்குப் பிறகு ‘விழித்திரு’ படத்தை வெளியிட்டுள்ள இயக்குநர், தயாரிப்பாளர் மீரா கதிரவன், தரமான ஒரு படமாக உருவாக்கியுள்ளதால் அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

இந்தப் படத்திற்கு டிவிட்டரில், பத்திரிகைகளில், சமூக வலைத்தளங்கள் என அனைத்து ஊடகங்களிலும் நேர்மறை விமர்சனங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.