விக்ரம் வேதா படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி ஜோடி, அடுத்ததாக என்ன திரைப்படத்தை இயக்குவார்கள்? யார் கதாநாயகனாக நடிக்க போகிறார் என்கிற கேள்வி சமீப காலமாகவே அதிக அளவில் வட்டமிட்டு வரும் நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புஷ்கர் - காயத்ரி முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் திரைப்படம் இயக்காமல் வெப் சீரிஸில் கவனம் செலுத்த உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விரைவில் துவங்க உள்ள இந்த சீரிஸில், நடிகர் பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

புஷ்கர் - காயத்ரி இருவரும் இணைந்து ஏற்கனவே 'ஓரம்போ', 'வா குவாட்டர் கட்டிங்' ஆகிய படங்களை இயக்கினர். ஆனால் இப்படங்கள் அவர்களுக்கு வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் தொடர்ந்து விடாமுயற்சியோடு, இவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்கிய 'விக்ரம் வேதா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.