Vikram Veda film collected 6 lakh dollar in US

மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா திரைப்படம் அமெரிக்காவில் 6 இலட்சம் டாலர்களை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

இயக்குனர் தம்பதியினர் புஷ்கர் & காயத்ரி இயக்கத்தில் உருவான படம் ‘விக்ரம் வேதா’. இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சஷிகாந்த் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் தமிழகம் மட்டுமின்றி அமெரிக்காவிலும் சாதனை படைத்து வருகிறது. இது குறித்து அமெரிக்கா விநியோகஸ்தர்களான அட்மஸ் எண்டர்டெய்ன்மென்ட் தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில், ‘‘விக்ரம் வேதா’ அமெரிக்காவில் சாதனை படைத்து வருகிறது. வெளியான 3-வது வாரம், திங்கட்கிழமை அன்று, 6 இலட்சம் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது.

அமெரிக்காவில் வெளியாகும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக தமிழில் நடித்த மாதவன், விஜய் சேதுபதி படம் வசூலித்துள்ளது. இதற்கு முன், ரஜினி, கமல், விஜய், மணிரத்னம், ஷங்கர் ஆகியோரது படங்கள் தான் 6 இலட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

விரைவில் ‘கத்தி’, ‘கோச்சடையான்’ செய்த வசூலை ‘விக்ரம் வேதா’ அமெரிக்காவில் முந்தும். அதிகம் வசூலித்த டாப் 10 படங்களில் ஒன்றாக ‘விக்ரம் வேதா’ இடம் பிடிக்கும்’’ என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.