Vikram Veda composer music to thala thalapathi films

அஜீத், விஜய் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை இளம் இசையமைப்பாளரான சாம் சி.எஸ் பெற்றுள்ளார்.

அஜீத் மற்றும் சிவா இணையும் ‘தல 58’ படத்திற்கும், விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் ‘தளபதி 62’ படத்திற்கும் இளம் இசையமைப்பாளரான் சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார்.

இந்த இரண்டு படங்களும் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைக்க இளம் இசையமைப்பாளரான சாம் சிஎஸ்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

இவர் சமீபத்தில் இசையமைத்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து ஒரே நேரத்தில் தல, தளபதி என இரண்டு பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு தேடி வந்துள்ளது.

ஏற்கனவே இவர் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் நடித்து வரும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் தல, தளபதி படங்களுக்கு இசையமைப்பது உறுதியானால் அவர் கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் பட்டியலில் இணைந்துவிடுவது உறுதி.