vikram son movie announced
விக்ரம் மகன் துருவ், தெலுங்கில் விஜய் தேவகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்திற்கு ஏற்கனவே 'வர்மா' என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தை விக்ரமின் ஆஸ்தான இயக்குனர் பாலா இயக்க உள்ளார்.
ஏற்கெனவே இந்தப் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்தப் படத்தின் படபிடிப்பு பிப்ரவரி மாதம் கடைசியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக துருவை தயார் செய்து வரும் பாலா. படத்திற்கு ஏற்ற நாயகியைத் தேடும் வேளையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
