நடிகர் விக்ரமின் மகன் துருவ்,  கோலிவுட்டில் 'ஆதித்ய வர்மா' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார்.  இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தை கிருஷய்யா என்கிற இயக்குனர் இயக்கி வருகிறார். கதாநாயகியாக நடிகை பனிதா சந்து நடிக்கிறார்.  இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது துருவ் முன்னணி இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

ஆனால் இந்த தகவலை விக்ரம் தரப்பில் இருந்து முழுமையாக மறுத்துள்ளனர்.  மேலும் துருவ் ஆதித்ய வர்மா படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், இந்த படத்தின் ரிலீசுக்கு பின்பே மற்ற படங்களில் நடிப்பது குறித்த முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.