vikram son dhuruv movie heroine name and photo
நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவின் மூலம் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை நடிகர் விக்ரமின் ஃபேவரட் இயக்குர் பாலா இயக்குகிறார். 
தெலுங்கில், நடிகர் விஜய்தேவர கொண்டா நடித்து , சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக எடுக்கப்படும் இந்த படத்திற்கு 'வர்மா' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பெருவாரியான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், கதாநாயகி யார் என்று முடிவு செயாப்படாமல் இருந்தது எனவே படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெறாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியை முடிவு செய்து விட்டனர் படக்குழுவினர். விக்ரம் மகன் துருவுக்கு ஜோடியாக, பெங்காலியை திரையுலகை சேர்ந்த ஹேமா, என்கிற இளம் நடிகை நடிக்க உள்ளார். இவரின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நடிகை செம ஹாட்டாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த புகைப்படம் இதோ...
