‘அசுரன்’படத்தின் அபாரமான வெற்றியால் தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி ஹீரோக்களும் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்கத் துடித்துக்கொண்டிருக்க நடிகர் சீயான் விக்ரம் அவருக்கு விஷேசமான ஆஃபர் ஒன்றை வழங்கியிருக்கிறார். ஸோ அடுத்து வெற்றிமாறன் யாரை வைத்து அடுத்த படம் இயக்கவிருக்கிறார் என்பது கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.

வெளியாகி 4 வாரங்கள் ஆன நிலையிலும் அசுரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் படத்தால் வெற்றிமாறனின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இப்படம் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரீ மேக் ஆகவிருக்கிறது.இந்நிலையில் அடுத்து பரோட்டா சூரியை வைத்து மினிமம் பட்ஜெட்டில் படம் இயக்குவதாக இருந்த வெற்றிமாறன் இப்போது அப்படத்தை இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

படம் வெளியான மறுநாளே வெற்றியின் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டியிருந்தார். வெற்றியும் அவரை சந்தித்து ஒரு கதை சொல்லியிருந்தார். லேட்டஸ்டாக இரு தினங்களுக்கு முன்பு வெற்றிமாறனைச் சந்தித்த நடிகர் விக்ரம், அடுத்த படத்தை தன்னை வைத்து இயக்கும்படி வேண்டுகோள் வைத்ததோடு அதே படத்தில் தனது மகன் துருவ் விக்ரமையும் நடிக்க வைத்து ஒரு பிரேக் கொடுக்கும்படி வேண்டுகோள் வைத்திருக்கிறாராம். அதாவது விக்ரமை வைத்து படம் இயக்க வெற்றி ஒப்புக்கொண்டால் துருவ் சம்பளம் எதுவும் கேட்காமல் நடிப்பார் என்பது விக்ரமின் மறைமுக ஆஃபராம்.