கவும்தம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் தகவல்கள் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த வகையில் நேற்று மாலை 6 மணிக்கு 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவலையும் விக்ரமின் கேரக்டர் பெயரையும் கவுதம்மேனனின் 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாக புதிய போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போஸ்டரில் விக்ரம், 'சால்ட் அண்ட் பெப்பர்' கெட்டப்பில் அட்டகாசமாக உள்ளார். 'ஜான்' என்ற கெட்டப்பில் வெளிவந்துள்ள இந்த ஒரே ஒரு ஸ்டில் படத்தின் வெற்றியை உறுதி செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன

மேலும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், தினந்தோறும் இதுகுறித்த புதுப்புது அறிவிப்புகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.