vikram prabu next asuraguru

பக்கா

எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் பக்கா என்ற படத்தில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு. நெருப்புடா படத்திற்கு பிறகு இந்த படத்திலும் நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயினாக பிந்து மாதவி நடித்துள்ளார்.

ஹன்சிகா

இதைத் தொடர்ந்து தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் துப்பாக்கி முனை என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். 

அசுரகுரு

இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கு அசுரகுரு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ராஜ்தீப் இயக்கும் இப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.நாளை முதல் இப்படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது.

கை கொடுக்குமா

விக்ரம் பிரபுவுக்கு முதல் படமான கும்கி மட்டுமே வெற்றி பெற்றது.அதன்பிறகு அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்தன.ராசியில்லாத நடிகர் என்ற பெயரை வாங்கி விட்டார் விக்ரம் பிரபு. எனவே இந்த படங்காளவது கைகொடுக்குமா என காத்திருக்கிறார் விக்ரம் பிரபு