Asianet News TamilAsianet News Tamil

Chiyaan 61 : விக்ரம் - பா.இரஞ்சித் கூட்டணியில் இணைந்த ஜிவி பிரகாஷ்... பூஜையுடன் தொடங்கியது ‘சியான் 61’ படம்

Chiyaan 61 : விக்ரம் - பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாக உள்ள சியான் 61 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Vikram Pa ranjith movie Chiyaan 61 started with pooja
Author
Tamil Nadu, First Published Jul 16, 2022, 10:10 AM IST

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருகிறார் விக்ரம். இவர் நடிப்பில் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உள்ளன. இதில் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. அதன்படி கோப்ரா படம் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதியும், பொன்னியின் செல்வன் படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதியும் ரிலீசாக உள்ளது.

Vikram Pa ranjith movie Chiyaan 61 started with pooja

இதையடுத்து நடிகர் விக்ரம் நடிக்க உள்ள 61-வது படத்தை பா.இரஞ்சித் இயக்க உள்ளதாகவும், இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளதாகவும் கடந்தாண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. 

இதையும் படியுங்கள்... ‘மாமனிதன்’களுக்கு கிடைத்த அங்கீகாரம்... விஜய் சேதுபதி, சீனு ராமசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் அறிவிப்பு

Vikram Pa ranjith movie Chiyaan 61 started with pooja

இதில் இயக்குனர் பா.இரஞ்சித், நடிகர்கள் விக்ரம், கலையரசன், ஆர்யா, சிவகுமார், நடன இயக்குனர் சாண்டி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் இதில் கலந்துகொண்டார். இதன்மூலம் அவர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Vikram Pa ranjith movie Chiyaan 61 started with pooja

பா.இரஞ்சித் இயக்கும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பது இதுவே முதன்முறை ஆகும். அதேவேளையில் நடிகர் விக்ரம் உடன் அவர் இணைவது இது 3-வது முறை ஆகும். ஏற்கனவே விக்ரம் நடித்த தாண்டவம், தெய்வத்திருமகள் போன்ற படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ண பாலிவுட்டில் இருந்து கவர்ச்சி நடிகையை களமிறக்கிய சிறுத்தை சிவா..!

Follow Us:
Download App:
  • android
  • ios