Asianet News TamilAsianet News Tamil

vikram : சூர்யா பின்வாங்கியதால் அஜித்துடன் மோத தயாராகும் விக்ரம்.... ‘வலிமை’க்கு போட்டியாக களமிறங்குகிறார்

பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள வலிமை படம் ரிலீசாக உள்ளதால், அப்படத்துக்கு போட்டியாக எந்த தமிழ் படமும் வெளியாகாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விக்ரமின் மகான் படம் களமிறங்கி உள்ளது. 

vikram mahaan movie ready to clash with Ajith Valimai
Author
Tamil Nadu, First Published Dec 6, 2021, 5:30 PM IST

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் ‘மகான்’.

விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவரது மகன் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

vikram mahaan movie ready to clash with Ajith Valimai

மகான் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இசைக்கோர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மகான் படத்தை அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு நேரடியாக ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

vikram mahaan movie ready to clash with Ajith Valimai

பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள வலிமை படம் ரிலீசாக உள்ளதால், அப்படத்துக்கு போட்டியாக எந்த தமிழ் படமும் வெளியாகாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விக்ரமின் மகான் படம் களமிறங்கி உள்ளது. முன்னதாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. பின்னர் வலிமையுடன் வெளியிட்டால் வசூல் பாதிக்கும் எனக் கருதி அப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios