முன்பெல்லாம் ஒரு படத்தின் படப்பிடிப்பை ஆரமிக்கும் போதே அந்த படத்தின் பெயரையும் அறிவித்து விடுவார்கள் படக்குழுவினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் இப்போது எல்லாம் விஜய் 61, அஜித் 57 என்று அவர்களின் படங்களின் எண்ணிக்கைவைத்து தான் அறிந்து கொள்ளப்படுகிறது. காரணம் கேட்டால் கதைக்கு ஏற்ற தலைப்பு அமைய வில்லை என்று கூறுகின்றனர்.

படத்தின் பாதி படபிடிப்பு முடிந்து டீசர் வெளிவரும்போது தான் படத்தின் தலைப்பும் வெளியிட படுகிறது. 

இதே போல தற்போது இயக்குனர் விஜயச்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 53வது படத்திற்கு கெட்ச் என்று பெயர் சூட்டி இருந்தாலும் இது ஆங்கிலத்தில் உள்ளதால் தற்போது தமிழில் புதிய பெயர் தேடிவருகின்றனராம். 

இதன் காரணமாக விக்ரமின் 53 படம் என்று தான் தற்போதுவரை படக்குழு கூறி வருகின்றனராம்.

இந்த படத்தின் தலைப்பும் டீசர் வெளிவரும்போது வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. இதன் மூலம் அஜித், விஜய் மட்டுமே கட்டிப்பிடித்து வந்த இந்த பாணியை இப்போது விக்ரமும் கடைபிடிக்க தொடங்கியுள்ளார்.