vikram daugther akshitha reception

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விக்ரமின் மகளுக்கும், திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் மானு ரஞ்சித்திற்கும் கடந்த மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

மேலும் இவர்களுடைய வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் மட்டுமே கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதே போல இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் நீல நிறத்தில் ஆடை அணிந்திருந்தனர். அதனால் மண்டபத்தில் எங்கு பார்த்தாலும் நீல மயமாகவே இருந்தது.

தற்போது நடைபெற்ற இந்த வரவேற்பு பிரபலங்க ளுக்காக மட்டுமே நடந்துள்ளது, இதே போல் தன்னுடைய ரசிகர்களுக்காகவும் தனியாக ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.