நடிகர் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தின் செகண்ட் லுக் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

நடிகர் சீயான் விக்ரம்  அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையிலும், இரண்டாம் கட்ட ஷூட்டிங் கொல்கத்தாவிலும் நிறைவடைந்தது. மூன்றாம் கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் ரஷ்யா சென்ற போது, உலகம் முழுவதும் கொரோனா பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழுவினர் உடனடியாக இந்தியா திரும்பினர். 

விக்ரமின் 58 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை 7 க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக, கே.ஜி.எப். படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி நடிக்கிறார். இந்த படத்தில் விக்ரம் 20 கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்: போட்டி பொறாமை தொலைத்து... பிக்பாஸ் வீட்டில் களைகட்டிய கொண்டாட்டம்..! வீடியோ...
 

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படம் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார்.  “டிமாண்டி காலனி”, “இமைக்கா நொடிகள்” என வித்தியாசமான கதைகளை கையாண்ட அஜய் ஞானமுத்துவுடன் சீயான் விக்ரம் கைகோர்த்துள்ளதால் ஒட்டு  மொத்த திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. 

மேலும் செய்திகள்: பட்டு புடவையில் பார்க்க பார்க்க தீராத அழகு... ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானிஸ்ரீயின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
 

ஏற்கனவே வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'கோப்ரா' படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. விக்ரம் முகத்தின் ஒரு பாகத்தில் இருந்து, சில எண்கள் மற்றும் பார்முலாக்கள் வெளியாவது போல் உள்ளது. 

தற்போது வெளியாகியுள்ள கோப்ரா படத்தின் போஸ்டர் இதோ...