பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் சிரித்து பேசுவதை விட, கடுமையான கோபத்துடனும், நான் தான் முதலிடத்திற்கு வர வேண்டும் என்கிற பொறாமை குணத்தோடு விளையாடுவதை பார்க்க முடிகிறது. 

ஆனால் தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோவில், போட்டியாளர்கள் அனைவரும்... பிக்பாஸ் வீட்டில் மகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் பரிசுகளை பரிமாறி கொண்டும்,  கேக் வெட்டும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

யார் எது சொன்னாலும், எது செய்தாலும் மூஞ்சியை உம்முனு வைத்திருக்கும் அனிதா இந்த கொண்டாட்ட ஏற்பாடுகளை பார்த்து உச்சிகுளிர்ந்த சந்தோஷத்தில் இருக்கிறார். எங்கு பார்த்தாலும் மின்னும் வண்ண மின் விளக்குகள், ஸ்டார், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள் என பிக்பாஸ் வீடு கொண்டாட்ட களமாக மாறியுள்ளது. 

மேலும் போட்டியாளர்களை கூடுதல் சந்தோஷமாக்க பாடல்களும் ஒருகுழுவினர் பிக்பாஸ் வீட்டிற்கு விசிட் அடித்து பாடியுள்ளனர். பல்வேறு பரிசுகளை பரிமாறி கொண்டு, விதவிதமான சாப்பாடு என இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை போட்டியாளர்கள் கொண்டாடி மகிழ்ந்த ப்ரோமோ இதோ...